தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..! - வானிலை ஆய்வு மையம் - Puducherry Rain

Orange alert in TN: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Orange alert in TN
Orange alert in TN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 11:25 AM IST

சென்னை:வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அந்தவகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே கனமழை பெய்துவருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் காரைக்காலுக்கு மிகவும் பலத்த கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், கடலுர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பில்கிஸ் பானு வழக்கு; 11 பேரின் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details