தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. நண்பரை கொலை செந்த நபர்.. சென்னையில் நடந்தது என்ன?

சென்னையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பரை நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கிய நிலையில், தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

illegal relationship issue
கள்ள தொடர்பு விவகாரம்

By

Published : Jun 12, 2023, 6:25 PM IST

சென்னை:பல்லவன் சாலை, காந்திநகரை சேர்ந்தவர் லோகேஷ்(26). இவருக்கு திருமணமாகி சத்யா(29) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ்(23). லோகேஷும் பவுல்ராஜும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் பவுல்ராஜ் அடிக்கடி லோகேஷின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது லோகஷின் மனைவி சத்யா உடன் பவுல்ராஜுக்கு நெருங்கிய நட்பு உண்டாகி உள்ளது. பின்னர் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த ஒரு வருடமாக இருவரும் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்த சம்பவம் லோகேஷுக்கு தெரியவந்த நிலையில் மனைவி சத்யா மற்றும் நண்பன் லோகேஷ் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார்.

இருப்பினும் இருவரும் தொடர்ந்து கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளனர், இதனை அறிந்த லோகேஷ் ஆத்திரமடைந்து கடந்த 7 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே நடத்து சென்று கொண்டிருந்த பவுல்ராஜை, லோகேஷ் தடுத்து நிறுத்தி கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதையும் படிங்க:"மாவட்டத்தை மாத்தன எங்களுக்கு மேயரெல்லாம் ஒரு மேட்டரா?" - வைரலாகும் ஆடியோவும், கவுன்சிலரின் விளக்கமும்!

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பவுல்ராஜை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பவுல்ராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இச்சம்பவம் குறித்து பவுல்ராஜ் சகோதரி கனிமொழி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோகேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தீவிர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பவுல்ராஜ் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் கொலை வழக்ககாக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பவுல்ராஜை கொலை செய்த லோகேஷ் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க:துப்பாக்கி காட்டி மிரட்டல் : பாஜக பிரமுகர் சிக்கியது எப்படி? "புஷ்பா" திரைப்படம் போன்று செம்மரக்கடத்தல் சாம்ராஜ்யம்

ABOUT THE AUTHOR

...view details