தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோத மது விற்பனை: 10 பேர் கைது; 400 மது பாட்டில்கள் பறிமுதல்! - chennai crime news

சென்னை: தாம்பரம் அடுத்துள்ள பொன்மார் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பத்து பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து, 400 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை செய்திகள்  சட்டவிரோத மது விற்பனை  chennai news  chennai crime news  tambaram illegal liqour
சட்டவிரோத மது விற்பனை:10 பேர் கைது;400 மது பாட்டில்கள் பறிமுதல்

By

Published : May 29, 2020, 3:57 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த பொன்மார் பகுதியிலுள்ள மதுக்கடையிலிருந்து விதிமுறைகளை மீறி ஒரு கும்பல் மதுபாட்டில்களை வாங்கிச் சென்று அதிகவிலைக்கு விற்பனை செய்துவருவதாக கலால் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கலால் துறையினர், மதுபாட்டில்களை வைத்திருந்த 10 பேர் கொண்ட கும்பலை கையும் களவுமாகப் பிடித்தனர்.

மேலும், பிடிபட்டவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்றும், மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்; நான்கு பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details