தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தர் மீது நடவடிக்கை தாமதம்! - Associate Professor

பேராசிரியர், இணைப் பேராசியர் நியமனத்தில் முறைகேடு செய்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 11, 2023, 5:19 PM IST

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருஷ்ணன் பாஸ்கர் 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இருந்தார். அவரின் பதவிக்காலத்தில் பேராசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் கால தாமதம் செய்து வருகின்றனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கிருஷ்ணன் பாஸ்கர் தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் நியமன முறைகேட்டில் முன்னாள் துணைவேந்தர் கிருஷ்ணன் பாஸ்கர் உட்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு 2022 டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கான அரசாணை 2022ம் ஆண்டில் வெளியிடப்பட்டும், உயர்கல்வித்துறையின் இணைய தளத்தில் அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது. பல்கலைக்கழகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளாக பதவியில் இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேராசிரியர், இணைப் பேராசியர் நியமனத்தில் முறைகேடு செய்த, முன்னாள் துணைவேந்தர் பாஸ்கர், அப்போதைய பதிவாளர், பல்கலை தேர்வுக் குழு உள்ளிட்ட 7 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின் படி அண்ணாப் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மற்றவர்களில் சிலர் ஒய்வு பெற்றும், சிலர் பல்கலைக் கழகத்தில் பணியிலும் உள்ளனர்.

பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு பின்னர் முறைகேடுகள் வெளியில் வந்துள்ளது. இந்த விசாரணை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கிருஷ்ணன் பாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கு பாலமுருகனையும், சமூகவியல் இணைப் பேராசிரியர் முருகேசனையும் நியமிக்க ஒப்புதல் முன்னாள் பதிவாளர் ஏ.ஜான் டி.பிரிட்டோ, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் பாலசுப்ரமணியன், ஆர்எஸ் ராஜேஷ், டாக்டர் என்.கண்ணன் (ஓய்வு). சமூகவியல் துறையின் முன்னாள் தலைவர் மருதகுட்டி ஆகியோர் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

துறையில் இளையவர்களாக இருந்த இவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணியில் தேவையான அனுபவம் இல்லாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களின் நியமனம் கட்டாய யுஜிசி வழிகாட்டுதல்களை மீறுவதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மேலும் இது குறித்து தற்போதைய துணைவேந்தர் சந்திரசேகரிடம் கேட்டப்போது, இந்த குற்றசாட்டு சம்மந்தமாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும். அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற 1,425 பேருக்கு பணி ஆணை!

ABOUT THE AUTHOR

...view details