சென்னை: புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாகவும், தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து பின் அவர்களைப் பணி நிரந்தரம் செய்யப்பதாகக் கூறி, புதுச்சேரியினைச்சேர்ந்த பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்துவிட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேரை சட்டவிரோதமாக, முறையற்ற முறையில் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால், அரசு உத்தரவைப் பின்பற்றியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாதிட்டார்.