தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் - இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடைபெறும் என இல்லம் கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் அறிவித்துள்ளார்.

இல்லம் தேடி கல்வி சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு!
இல்லம் தேடி கல்வி சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு!

By

Published : May 10, 2022, 12:39 PM IST

சென்னை:கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடைபெறும் என இல்லம் கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் அறிவித்துள்ளார். ஆனால் மாணவர்களுக்கு வழக்கமான பாடங்கள் இல்லாமல் விளையாட்டுகள் ,கலை நிகழ்வுகள் ,போன்ற மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும்.வகையில் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கோடை விடுமுறை காலத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை கருத்துக் கணிப்பு நடத்தியது. கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கோடை விடுமுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வேண்டாம் என 55 சதவீத பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இல்லம் தேடி கல்விதிட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் செயல்படும். என்றும் .வழக்கமான பாடங்கள் இல்லாமல் விளையாட்டுகள் ,கலை நிகழ்வுகள் ,போன்ற மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும்.வகையில் வகுப்புகள்.நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்கள் உள்ளவர்களுக்கு மே 14ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் வாசிப்பு இயக்கம் துவங்க உள்ளதால் அவர்களை நூலகங்களுக்குச் சென்று தயார் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

மேலும் வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்கும் வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உடன் இணைந்து இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பணியாற்ற வேண்டும் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க உதவும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒரே மாதிரி அழகாக எழுதும் பள்ளி மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details