தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளையராஜாவை வெளியேற்றிய வழக்கு: பிரசாத் ஸ்டூடியோ பதிலளிக்க உத்தரவு

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதற்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி இளையராஜாவின் மனுவுக்கு பிரசாத் ஸ்டூடியோ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ilayaraja expel from prasath lab, move financial compensation petition, MHC
Ilayaraja expel from prasath lab, move financial compensation petition, MHC

By

Published : Dec 12, 2020, 12:16 PM IST

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருள்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது. தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு 17ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இரண்டு வாரத்துக்குள் சிவில் நீதிமன்றத்தில் முடிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details