சென்னை:நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச.14) அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “அம்மாவுக்குதான் நீங்கள் பதவியேற்றதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதைத் தான் வள்ளுவர் சொல்லி உள்ளார். அது நிஜமாகவே நடக்கும்போது அம்மாவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கிறேன்.