தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்! - சாய்பிரசாத் மீது இளையராஜா புகார்

சாய்பிரசாத் மீது இளையராஜா புகார்
சாய்பிரசாத் மீது இளையராஜா புகார்

By

Published : Jul 31, 2020, 4:48 PM IST

Updated : Jul 31, 2020, 10:52 PM IST

16:35 July 31

சென்னை: பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி சாய்பிரசாத் இசை கருவிகளை திருடி விற்றுவிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கு சொந்தமான இசை கருவிகளை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அப்போதைய நிர்வாகியாக இருந்த பிரசாத், இளையராஜாவிற்கு சொந்தமாக ஒரு அறையை ஒதுக்கி ஒப்பந்தம் அளித்து உள்ளார். நிர்வாகி பிரசாத் மறைந்த பின்பு பிரசாத் ஸ்டுடியோவை அவரது பேரன் சாய் பிரசாத் நிர்வகித்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாய் பிரசாத் இளையராஜாவிற்கு சொந்தமான அறைக்கு அத்துமீறி சென்று விலையுயர்ந்த கருவிகளை சேதப்படுத்தியதாக இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சாய் பிரசாத் இளையராஜாவிற்கு சொந்தமான அறையில் கள்ள சாவி போட்டு திறந்து உள்ளே இருந்த விலையுயர்ந்த இசை கருவிகளை சேதப்படுத்தியும், சில இசை கருவிகளை திருடி விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இசையமைப்பாளர் இளையராஜா இன்று(ஜூலை 31) பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி சாய்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!

Last Updated : Jul 31, 2020, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details