தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்

By

Published : Aug 13, 2022, 1:35 PM IST

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு இளம்பகவத் ஐஏஎஸ், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம்

சென்னை:தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (ஆக. 13) வெளியிடப்பட்ட அரசாணையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்துக்கான பள்ளிகள், பயனாளிகள், ஒருங்கிணைப்பு மையங்கள், செயல்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றை துரிதமாக கண்டறிதல், மூலப்பொருட்கள் கொள்முதல், உள்ளூர் காய்கறிகள் கொள்முதல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல், பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைத்தல், ஒட்டுமொத்த செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பு அலுவலர் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,545 அரசுப்பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உப்பளத்தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத்தொகை திட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details