தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பாத்திமா லத்தீப் வழக்கை சிபிஐக்கு மாற்றுக!’ - உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை! - High Court

சென்னை: இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் 2006ஆம் ஆண்டு முதல் 14 தற்கொலைகள் நடந்திருப்பதால், உயிரிழந்த ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

High Court
High Court

By

Published : Nov 29, 2019, 11:58 PM IST

லோக் தந்திரி ஜனதா தளத்தை சேர்ந்த சலீம் மாதவுர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை ஐஐடி வளாகத்தில் பல தற்கொலைகள் நடந்திருப்பதாகவும், இதில் சாதி பாகுபாடு அதிகளவில் நடந்து வருவதாகும் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகளவில் துன்புறுத்தல்கள் கொடுமைகளும் நடந்து வருகிறது.

அகில இந்திய அளவில் ஐஐடியில் சுமார் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சரே நாடாளுமன்றத்தில் பேசி இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை ஐஐடியில் பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்திருக்கிறார். இதை காவல் துறை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருப்பதால் யாரையும் குற்றவாளியாக காவல் துறை விசாரிக்கவில்லை.

பாத்திமாவின் பெற்றோர்கள், இரண்டு பேராசிரியர் மீது குற்றச்சாட்டுகள் வைத்த போதும் அவர்களை இதுவரை விசாரணை வளையத்தில் காவல்துறை எடுத்து வரவில்லை என்பதால் வழக்கு சிபிசிஐ-டிக்கு மாற்றபட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடி காவல் பிரிவு விசாரித்தால் வழக்கின் உண்மை தன்மை வெளியே வராது. இதில் பல உயர் அலுவலர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வரும் திங்கள் விசாரணைக்கு வர உள்ளது.

For All Latest Updates

TAGGED:

High Court

ABOUT THE AUTHOR

...view details