தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2019, 2:19 PM IST

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் மாணவர்கள் போராட்டம் நடத்த தடை!

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இனி ஐஐடியில் மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என நிர்வாகம் தடை விதித்துள்ளது.

iit students
iit students

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா இறப்பிற்குப் பிறகு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை ஐஐடியில் நடைபெற்ற போராட்டம் தேசிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐஐடியில் மாணவர்கள் யாரும் போராடக் கூடாது என நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி மாணவர் நல இயக்குனர் சிவகுமார் அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "அன்பு மாணவர்களுக்கு, சில மாணவர்கள் நிர்வாகத்தின் முன் அனுமதியினை பெறாமல் வளாகத்திற்குள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் வெளியிலிருந்தும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஐஐடி வளாகத்திற்குள் வருவதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டும். ஐஐடி நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளியாட்கள் யாரும் போராட்டம் அல்லது ஒன்று கூடுவதற்கு அனுமதி கிடையாது. இதுவரை ஜனநாயகத்திற்கு எதிராக ஒன்று கூடுதல், கோஷங்களை போடுதல் போன்றவை நடைபெறவில்லை. ஐஐடியின் இந்த நிலை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஐஐடி வளாகத்தில் கூட்டங்கள் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கூட்டங்கள் நடத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பேனர் தடை எதிரொலி: தேர்தலுக்காக அச்சகங்களில் குவியும் வேட்பாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details