தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

IIT Madras JAM 2024 தேர்வு: செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.! - இளங்கலைப் பட்டப்படிப்பு

கூட்டு நுழைவுத் தேர்வுக்கான (JAM 2024) விண்ணப்பங்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பெறப்படும் என ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 7, 2023, 4:39 PM IST

சென்னை: முதுநிலைப் படிப்புகளுக்கான (JAM 2024) கூட்டு நுழைவுத் தேர்வு வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பெறப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை jam.iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தின் வாயிலாக வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த தேர்வு எழுத வயது வரம்பு ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ள ஐஐடி மெட்ராஸ், இந்தியப் பட்டம் பெற்ற வெளிநாட்டினரும் சில விதிகளுக்கு உட்பட்டு இந்த தேர்வை எழுதலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மற்றும் தற்போது இளங்கலைப் பட்டப்படிப்புகளில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் JAM 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடி உழக்குடியிலும் அகழாய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு!

நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் கணினி வாயிலாக இந்த (JAM 2024) தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், பயோடெக்னாலஜி (BT), வேதியியல் (CY), பொருளாதாரம் (EN), புவியியல் (GG), கணிதம் (MA), கணிதப் புள்ளியியல் (MS, மற்றும் இயற்பியல்) தேர்வுகள் இடம்பெற உள்ளன.

ஐஐடியின் பல்வேறு துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மெரிட் பட்டியலின் கீழ் சுமார் 3000 இடங்களுக்கும், ஐஐஎஸ்சி மற்றும் என்ஐடிகளில் 2000க்கும் மேற்பட்ட இடங்கள் மேலும், IIEST ஷிப்பூர், SLIET, DIAT ஆகியவற்றில் CCMN மூலம் சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த JAM 2024 மதிப்பெண் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் 2024 மற்றும் 2025 கல்வியாண்டுக்கான முதுநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், JAM 2024 தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை JAM 2024 அதிகாரப்பூர்வ இணையதளமான https://jam.iitm.ac.in இலிருந்து பெறலாம் பெறலாம் எனவும் ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க:ரயிலில் தவறவிட்ட 6 வயது சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details