சென்னை:Indian Institute of Technology Madras (ஐஐடி மெட்ராஸ்) Pravartak Technologies Foundation சோனி இண்டியா ஸாஃப்ட்வேர் சென்டர் லிமிடெடுடன் இணைந்து பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு தொழில்துறைக்கு தயார் நிலையுள்ள தொழில்நுட்ப திறன்களை அளிக்கவிருக்கிறது. இந்த கோர்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
‘Sony India Finishing School Skill Development Training Program,’ என்றழைக்கப்படும் இது செயற்கை நுண்ணறிவு/ மெஷீன் லேர்னிங் (AI/ML), இணைய பாதுகாப்பு மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதோடு கூடவே வணிக தொடர்பு திறன் போன்ற குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளிக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் இந்த கீழ்க்கண்ட லிங்க்கை உபயோகித்து விண்ணப்பிக்கலாம் https://sonyfs.pravartak.org.in/
இந்த புரோகிராம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை முக்கியப்படுத்தி ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி, “இந்த புரோகிராம் பட்டம் பெறும் மாணவர்களுக்கும் தொழில் துறைக்கும் இடையே நிலவும் அறிவு மற்றும் திறன் சார்ந்த இடைவெளியை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.ஏராளமான மாணவர்கள்,அதிகுறிப்பாக இந்தியாவின் நகர்ப்புறங்களற்ற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.