தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'ஐஐடிஎம் கோவிட் கேம்' அறிமுகம்! - ஐ.ஐ.டி வேதியியல் பொறியியல் துறையை சேர்ந்த ப்ரீத்தி அகலயம்

சென்னை: ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள், கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

iit
it

By

Published : Nov 2, 2020, 6:29 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். ‌இந்நிலையில், கரோனா குறித்த விழிப்புணர்வை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தும்விதமாக ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதிதாக ஆன்லைன் கேம் ஒன்றை தயாரித்துள்ளனர். அந்த விளையாட்டிக்கு ஐஐடிஎம் கோவிட் கேம் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த கேம் ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 12 மொழிகளில் விளையாடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இதை செல்போன், கணினி, மடிக்கணினி மூலம் எளிதாக விளையாட முடியும். இந்த விளையாட்டை

www.letsplaytolearn.com என்ற இணையதளத்தில் இலவசமாக விளையாடி கொள்ளலாம். இதுமட்டுமின்றி ஐஐடி மெட்ராஸ் வலைதளத்திலும் இந்த கேம்மை விளையாடி முடியும்.

இது குறித்து ஐஐடி வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த ப்ரீத்தி அகலயம் கூறுகையில், "ஜனவரி-மே 2020 செமஸ்டரில் வழங்கப்பட்ட 'லெட்ஸ் ப்ளே டு லர்ன்' என்ற பாடத்திட்டத்தை அடிப்படையில் மாணவர்களால் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது.

இதில் மாணவர்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான கற்றல் கருவிகள் மற்றும் நுட்பங்கள் கற்பிக்கப்பட்டன. இந்த விளையாட்டைத் தயாரித்த முழு பெருமையும் மாணவர்களுக்கு மட்டுமேதான். சிறிய கேம் மூலம் மக்கள் தேவையான விழிப்புணர்வை அழகாக ஏற்படுத்தியுள்ளனர்" என்றார்

மேலும் அவர் கூறுகையில், "இந்த விளையாட்டுப் பிரபலமான 'சூப்பர் மரியோ' விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் தேவைப்படும் விஷயங்களாக முகக்கவசங்கள், கைகளைக் கழுவுதல் உள்ளன மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களாக கைக் குலுக்குதல், கட்டிப் பிடிப்பது போன்றவை உள்ளன. தேவைப்படும் விஷயத்தை பிடித்தால் ஒரு புள்ளி சேர்க்கப்படும், தேவையில்லாத விஷயங்களில் இருந்து குதித்து தப்பிக்காமல் பிடித்தால் ஒரு புள்ளி கழிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details