தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் மாணவியின் தந்தை நம்பிக்கை - ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிஐ விசாரணையில் நம்பிக்கை உள்ளது எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மாணவியின் தந்தை நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மாணவியின் தந்தை நம்பிக்கை
மாணவியின் தந்தை நம்பிக்கை

By

Published : Dec 7, 2021, 8:54 AM IST

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற 19 வயது மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்துவந்தார். இவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அன்று விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அதை விரைந்து விசாரிக்கக் கோரி பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளார்.

மேலும் சிபிஐ அலுவலகத்தில் முன்னிலையாகி அவரது தரப்பு வாதம் பற்றி கூற உள்ளார். இதனால் அப்துல் லத்தீப் கொச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளரிடம் அவர், "எனது மகள் பாத்திமா உயிரிழந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க உள்ளேன். சிபிஐ விசாரணையில் நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

ABOUT THE AUTHOR

...view details