சென்னை:சென்னை ஐஐடியில் 2023 - 2024ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களுக்காக நடத்திய இன்டர்ன்ஷிப் (உள்ளகப் பயிற்சி) ஆட்தேர்வு முகாமின் (Internship Drive) முதல் நாளிலேயே, இன்டர்ன்ஷிப் ஆஃபர்ஸ் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை ஐஐடியில் 2023 - 2024ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களுக்காக இன்டர்ன்ஷிப் (உள்ளகப் பயிற்சி) ஆட்தேர்வு முகாம் ஆகஸ்ட் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றன. இந்த முகாமின் முதல் நாளிலேயே, 7 நிறுவனங்களிடமிருந்து 19 சர்வதேச இன்டர்ன்ஷிப்பிற்கான வாய்ப்புகள் வரப் பெற்றுள்ளன. இதன் காரணமாக, இன்டர்ன்ஷிப் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இன்டர்ன்ஷிப்பிற்காக சென்னை ஐஐடிக்கு வருகை தந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, 51 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Texas Intruments), ஜே.பி.மோர்கன் சேஸ் அண்ட் கோ (JP Morgan Chase and co), அடோப் (Adobe), பிராக்டர் அண்ட் கேம்பிள் (Procter and Gamble), டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் (Dr.Reddys Laboratories) போன்ற நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை இன்டர்ன்ஷிப்பிற்காக தேர்வு செய்தன.