சென்னை: தொழில்துறை நிபுணர்களுக்கு இ-மொபிலிட்டி (e-Mobility) தொடர்பான ஆன்லைன் சான்றிதழ் படிப்பை ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆன்லைன் படிப்புக்கான பாடத்திட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், 4 தொகுதிகள் தொழில்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு ஏற்றார்போல், தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ட்ரெண்டுகள், தொழில்துறை தேவைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும், இதில் இ-மொபிலிட்டி எக்கோ சிஸ்டம், பவர் எலெக்ட்ரானிக்ஸ், பேட்டரி இன்ஜினியரிங், பவர் ட்ரெய்ன்ஸ், தெர்மல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட தொழில்துறை அடிப்படைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஐடி சென்னையின் இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், "ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிட்ட தொகுதிகள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறி வருவதால், தொழில்துறையில் ஏற்கெனவே பணிபுரிந்துவரும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் எங்களிடம் கேட்டிருந்தனர்.