தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சிகள்- சென்னை ஐஐடி அசத்தல்

Madras IIT: ஐஐடி மெட்ராஸ் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக(TAU) ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான பயனுள்ள ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 8:31 PM IST

சென்னை:நீர்மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல் அவிவ் பல்கலைகழகத்துடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் கழிவிநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சிகளை தயாரித்துள்ளது. மேலும் அதன் செயல்முறை குறித்தும் விளக்கப்பட்டது.

காற்றுடன் கலந்திருக்கும் மிக இலகுரக திடப் பொருட்களான ஏரோஜெல்கள், சிறந்த உறிஞ்சிகளாகவும்(Adsorption) கழிவு மற்றும் மாசுபாடுளை அகற்றப் பயன்படுத்தும் திடப்பொருளாகவும் செயல்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில், நீர் ஆதாரங்கள் வெறும் 4% அளவுக்கு மட்டுமே இருப்பதால், பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது.

நீர் மாசுபாட்டை சரிசெய்யும் முயற்சியாக, குறிப்பிட்ட மாசுக்களை சுத்திகரிக்கும் வகையில் ஏரோஜெல்களை திரும்பவும் உருவாக்கி, மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கழிவுகள் குறைந்துகொண்டே வருவதுடன், குடிநீரை சுத்திகரிக்கவும் உதவும் என்று அந்த திட்டத்தில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த ஆராய்ச்சியில், 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' பரிசு பெற்ற பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமையிலான ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிக் குழுவில், ஐஐடி மெட்ராஸ் கெமிக்கல் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான திரு. சுபாஷ் குமார் சர்மா, பி.ரஞ்சனி மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஹடாஸ் மாமனே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என்று ஐஐடி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து, பேராசிரியர் ரஜ்னிஷ்குமார் கூறுகையில், "கழிவுநீர் சுத்திகரிப்புக்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமின்றி, நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், அசுத்தமான தண்ணீருடன் தொடர்புடைய சுகாதாரப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் அவசியமாகிவிட்டன" என்றுத் தெரிவிதார்.

தொடர்ந்து இது குறித்து சில ஆராய்சியாளர்கள் கூறுகையில், "வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு மாசுபாடுத் தடயங்களை அகற்ற முயல்வது, அதிலும் குறிப்பாக மருந்து உற்பத்தித் துறையில் மிகக் கடினமாக இருந்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் உறிஞ்சுதல், நவீன ஆக்சிஜனேற்ற முறை, வடிகட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கை முறை மற்றும் குறைந்த செலவாகிறது. நீர் மாசுபாடு சவால்களை சமாளிக்கிறது. நீர்நிலைகளில் குறிப்பிட்ட மாசுக்களை சுத்திகரிக்கும் வகையில், ஏரோஜெல்களை திரும்பவும் உருவாக்கி, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கழிவுகள் குறைந்துகொண்டே வரும். இதன்மூலம் குடிநீரை சுத்திகரிக்க முடியும்.

மேலும் இதல் இடம்பெற்றுள்ள நீர் சுத்திகரிப்பு, அசுத்தங்களை ஈர்த்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றில் கிராஃபீன்-டோப் செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட சிலிக்கா ஏரோஜெல்ஸ் (GO-SA) சிறப்பாக செயல்படுகிறது. மேலும், பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு 85 சதவீதத்திற்கும் அதிகமான மாசுபாடுகளும், தொடர்ச்சியாக ஓடும் நீர்நிலைகளில் 76 சதவீதத்திற்கும் அதிகமான மாசுபாடுகளும் அகற்றப்படும்" என்று ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ரொம்ப நேரம் உட்கார்ந்து வேல பார்த்தா பக்கவாதம் வருமா?... நிபுணர்கள் சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details