சென்னை: சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தினர் (ஐஐடி) ஆற்றல் சேமிப்பைக் கருத்தில் கொண்டு, எல்இடி விளக்குகள், திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதிக விலையுள்ள பொருளுக்கு மாற்றான படிமத்தை கண்டறிந்துள்ளனர்.
இந்த படிகப் பொருள் ஹலைடு - பெரோவ்ஸ்கைட்ஸ் என அழைக்கப்படுகிறது. படிகமானது தொகுக்கப்பட்டபோது சிதைவுற்று ஒரு தீவிர வெள்ளை ஒளி வெளியிடப்படுகிறது.
சிறந்த மாற்று படிகம்
இதுகுறித்து வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் அரவிந்த் சந்திரன் பேசுகையில், “ இது தேர்ந்தெடுக்கப்பட்ட துல்லிய அணுக்களுடன் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அணுக்களின் குறிப்பிட்ட கலவையைச் சேர்த்து ஒருங்கிணைத்த போது, அது சிதைவுற்று தீவிர வெள்ளை ஒளியை வெளியேற்ற வழிவகுத்தது.