சென்னை ஐஐடி வளாகத்திற்கு வேளச்சேரியிலிருந்து வந்து செல்பவர்கள் பயன்படுத்துவதற்காக கிருஷ்ணா நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நுழைவுவாயிலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடி, ஐஐடி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நுழைவுவாயில் மூடப்பட்டதால், ஐஐடி வந்து செல்பவர்களும், அங்கு அமைந்துள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாவதால் வேளச்சேரி பக்கம் உள்ள கிருஷ்ணா நுழைவுவாயிலை திறக்க ஐஐடி-க்கு உத்தரவிடக்கோரி ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த நுழைவாயில் அருகில் மாணவிகள் விடுதி இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு கருதிதான் அந்த நுழைவுவாயில் மூடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நுழைவுவாயிலை திறக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து தென் சென்னை மக்களவை உறுப்பினர், மனுதாரர் ஆகியோர் குடியரசு தலைவருக்கும், மத்திய மனித வள மேம்பாட்டு துறைக்கு மட்டுமே மனு அனுப்பியுள்ளனரே தவிர, சென்னை ஐஐடி-க்கு அனுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.
வேளச்சேரி கிருஷ்ணா நுழைவுவாயிலை திறக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க ஐஐடிக்கு உத்தரவு!
சென்னை: வேளச்சேரியில் மூடப்பட்ட கிருஷ்ணா நுழைவுவாயிலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐஐடி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
IIT consider the representation of open blocked krishna entrance for people’s, MHC order
இதனால், மனுதாரர் இரண்டு வாரத்தில் சென்னை ஐஐடி-க்கு புதிதாக மனு அனுப்ப வேண்டுமென்றும், அதன்மீது ஐஐடி நிர்வாகம் 4 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் கொலை வழக்கு - உதவி ஆய்வாளருக்கு பிணை மறுப்பு!