தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடி புது முயற்சி: 15-க்கும் மேற்பட்ட படிப்புகள் அறிமுகம் - சென்னை ஐஐடியில் உயர் செயல்திறன்

சென்னை ஐஐடி பாடத்திட்டத்தில் உயர் செயல்திறனுக்கான ஓட்டம், அமைப்பு ரீதியான சிந்தனை, படைப்பாற்றலைக் கண்டறிவதற்கான படிப்பு உட்பட 15-க்கும் மேற்பட்ட படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடி புது முயற்சி: 15-க்கும் மேற்பட்ட படிப்புகள் அறிமுகம்
சென்னை ஐஐடி புது முயற்சி: 15-க்கும் மேற்பட்ட படிப்புகள் அறிமுகம்

By

Published : Feb 8, 2023, 8:19 PM IST

சென்னை:இளங்கலை மாணவர் ஒருவர் பாடத்திட்டத்தில் தகுதி பெற ஏராளமான பாடங்களை எடுக்க வேண்டிய அவசியம் இருந்து வருகிறது. மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் இந்த பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள், செயலாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு என்ற பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு சென்னை ஐஐடியின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இக்கல்வி நிறுவனம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுக்காக பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் ஏறத்தாழ 1,500 மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்கு பதிவு செய்கின்றனர். மாணவர்களின் கலாசாரம், திறமை, தலைமைத்துவத்தை மாற்றி அமைப்பதுடன் முழுமையான வளர்ச்சியை அடைவதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் அமையும். அனைத்து பி.டெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம்.

இந்தப் படிப்பு குறித்து ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறும்போது, 'சுய கண்டுபிடிப்பு, சுய விழிப்புணர்வு, சுய தலைமைத்துவம், சுய தேர்ச்சி போன்றவற்றின் மூலம் ஒருவரின் முழுத் திறனையும் செயல்படுத்தி மனித தூண்டுதலை நிறைவு செய்ய தனிப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் உதவுகின்றன.

இளைஞர்களின் மனங்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் வகையில் இத்திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். மாணவர்கள் பல்வேறு தொழில் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்குடன் தனிப்பட்ட மற்றும் மாற்றத்தக்க திறன்களை உருவாக்க தொழில்முறை பாடத்திட்டங்கள் உதவுகின்றன.

பெருகிவரும் போட்டித்தன்மை, தேவை மிகுந்த - நிச்சயமற்ற உலகை எதிர்கொள்ளும் வகையில், சரியான மனநிலை, நோக்கம் மற்றும் உரிமை குறித்த உணர்வு, மீட்புத்திறன், மதி நுட்பம் ஆகியவற்றுக்குத் தேவையான கருவிகள் மற்றும் திறன்களுடன் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது அவசியமாகும்.

நிபுணத்துவம் மிக்க, ஆதரவு அளிக்கும் முன்னாள் மாணவர்கள் இடம்பெற்றிருப்பதால் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அர்த்தம் மிகுந்ததாகவும் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், 'தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாடு பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில், நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இடம்பெற்றிருக்கும். வாழ்வதற்கான ‘மகிழ்ச்சியை மையப்படுத்திய’ அணுகுமுறை, படைப்பாற்றல் பழக்கங்களை உள்வாங்குதல், ஒரு தலைவரின் ஒருங்கிணைந்த பகுதியாக இடம்பெறுதல், சுய தேர்ச்சி, சுயமரியாதை மற்றும் சுய கண்டுபிடிப்பு, சாதக விளைவுகளை ஏற்படுத்தும் அணுகுமுறை மூலம் மதி நுட்பத்தை வளர்த்தல், வளமான உறவுகளை உருவாக்குதல், நிலையான செழுமையான வாழ்க்கை, சமூகத்தில் பொறியாளரின் பங்களிப்பு, புதுமையான மற்றும் தொழில்முனையும் மனப்பாங்கை வளர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் கற்பிக்கப்படுகிறது.

பாடத்திட்டத்தில் சுய விழிப்புணர்வு, மகிழ்ச்சியான பழக்கமும் வெற்றியும், உயர் செயல்திறனுக்கான ஓட்டம், அமைப்பு ரீதியான சிந்தனை, படைப்பாற்றலைக் கண்டறிதல் போன்ற 15-க்கும் மேற்பட்ட படிப்புகளில்
இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்’ என்றார்

இதையும் படிங்க:பிரதமர் மோடியின் புதிய நீலநிற கோட்: அதில் என்ன ஸ்பெஷல்?

ABOUT THE AUTHOR

...view details