இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் ஐஐடிக்கள் தொடங்கப்பட்டு 60ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. தற்போது 23 ஐஐடிக்கள் உள்ளன. இங்கு மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டில் 2008ம் ஆண்டு வரை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மட்டும் தான் இடம்பெற்றிருந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் 2008ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
'ஐஐடியில் மாநில வாரிய இடஒதுக்கீடுக்கு எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்' - முரளிதரன் - parlement
சென்னை: "ஐஐடியில் அந்தெந்த மாநில மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்" என்று முன்னாள் மாணவர் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் மாணவர் முரளிதரன் பேட்டி
இந்த இடஒதுக்கீடு மூலம் 37,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் 23 மாநிலங்களில் இயங்கும் ஐஐடிக்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு 50விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 விழுக்காடு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பிக் கொள்ளலாம். அப்போதுதான் மாணவர்களின் கல்வி தரம், இடபற்றாக்குறை தீரும். இதற்கு அந்தெந்த மாநில எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.