சென்னை:முதுகலை மருத்துவப்படிப்பிற்கான 2022-23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. தேசிய மருத்துவ கலந்தாய்வுக்குழு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 10 இடங்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 4 இடங்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 6 இடங்கள், மதுரை மருத்துவக் கல்லூரியில் 7, தஞ்சை மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் தலா 10 இடங்கள், நெல்லையில் 6, திருச்சியில் ஒரு இடம், தேனியில் 2 இடங்கள், ஈரோட்டில் 2 இடங்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 9 இடங்கள், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 5 இடங்கள், தூத்துக்குடியில் 4 இடங்கள், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.