தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது; டிகேஎஸ் இளங்கோவன் - திமுக

திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும்போது கலவரம் நடைபெறுவதை படம் எடுத்து செய்தி வெளியிடுங்கள், கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது, எனக்கூறினார்.

கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது; டிகேஎஸ் இளங்கோவன்
கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது; டிகேஎஸ் இளங்கோவன்

By

Published : Oct 6, 2022, 8:28 PM IST

சென்னை: வரும் 9-ம் தேதி திமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'மாமன்னர் ராஜராஜ சோழன், இந்துவா? இல்லையா? என விவாதம் நடைபெற்று வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் இந்து கிடையாது. அவர் ஒரு சைவ மன்னர்.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும்போது, எங்கெங்கெல்லாம் கலவரம் நடைபெறுகிறது என பத்திரிகையாளர்கள் படம் எடுத்து செய்தி வெளியிடுங்கள்' என்றார்.

அப்படியானால் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலவரம் நடக்கும் என்று சொல்கிறீர்களா...? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது" எனப் பதிலளித்தார்.

நடைபெற உள்ள பொதுக்குழுவில் கனிமொழிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கனிமொழிக்கு புதிய பொறுப்பு வழங்குவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிடைத்தது பஞ்சாயத்துராஜ் குழு தலைவர் பதவி: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற எம்.பி. கனிமொழி!

ABOUT THE AUTHOR

...view details