இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அரசுப் பள்ளி மாணவர்களுக்காக திமுக நடத்திய ஆர்பாட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்திய ஆர்பாட்டம் என அமைச்சர் ஜெயக்குமார் கொச்சைப்படுத்தியுள்ளார்.
'முதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் பெறுங்கள்' - பொன்முடி சவால் - அதிமுக அரசின் துரோகங்கள்
சென்னை: அதிமுக அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதலைப் பெறுங்கள் என முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான க.பொன்முடி சவால் விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பு என்று முதலில் குரல் கொடுத்தது திமுக. அந்தத் தேர்வை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றதும் திமுக. ஏன், அவர்கள் ஆட்சியில் இருந்தவரை அரசுப் பள்ளி மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்விற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனை கலைஞர் அரண் போல தடுத்திருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும், பாஜக அரசின் காலில் விழுந்து நீட் தேர்வை அனுமதித்தார். அதிமுகவின் இந்த நீட் நாடகத்தின் சாயம் திமுக போராட்டத்தால் வெளுத்துப் போய் விட்டது என்று தெரிவித்துக் கொண்டு, எங்கள் கழகத் தலைவர் கூறியது போல் இன்றோ நாளையோ 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவிற்கு முதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்குக் கெடு விதித்து ஒப்புதலைப் பெறுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.