தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பிரதமர் பேச்சு புரியலனா சேனல மாத்திக்கோங்க' - அமைச்சர் பாண்டியராஜன் - பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா

சென்னை: 'பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ உரையில் சப்டைட்டில் புரியவில்லை என்றால் சேனலை மாற்றி வேறு நல்ல நிகழ்ச்சி பாருங்க' என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Minister Pandiyarajan
Minister Pandiyarajan

By

Published : Dec 29, 2019, 11:21 PM IST

வரும் ஜனவரி 16ஆம் தேதி ’பரிஷ்கா பி சார்ச்சா’ எVdனும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். உரையாடலில் கலந்துகொள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

16ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாட்டில் குழப்பமும் சர்ச்சையும் கிளம்பியது. இது குறித்து விளக்கமளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டியதில்லை எனவும், உரையாடலை வீட்டிலிருந்தே பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தென்னக பண்பாட்டு மையத்தின் கலை நிகழ்ச்சிகள் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் "தேர்வு பயத்தை போக்கும்வகையில் பிரதமர் மோடி வரும் 16ஆம் தேதி மாணவர்களுடன் நேரலையில் பேசவுள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது

மாணவர்கள் அதனை வீட்டிலிருந்தே கேட்டுக் கொள்ளலாம். வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கேட்கலாம். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தெளிவுபடுத்திவுள்ளார். பிரதமர் மோடி நேரலையில் இந்தியில் பேசினால், சப்டைட்டில் கொடுக்கப்படும் என நினைக்கிறேன். சப்டைட்டில் புரியவில்லை என்றால் சேனலை மாற்றி வேறு நல்ல நிகழ்ச்சி பாருங்கள்" என்றார்.

இதையும் படிங்க: ’மோடியின் பேச்சை வீட்டிலேயே பாருங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details