தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்! - ஈரோடு அண்மைச் செய்திகள்

ஈரோடு : அரசுப்பேருந்து, தனியார் வாகனங்களில் பயணிப்பவர்கள், நடந்து செல்வோர் என முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோட்டில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
ஈரோட்டில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

By

Published : Apr 9, 2021, 8:33 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஒருவார காலமாக கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதால் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் வீடுகள், தெருக்களை தடுப்புகள் அடைத்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஏப்.9) முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றோர், அரசு, தனியார் பேருந்துகளில் முகக்கவசமின்றி பயணித்தோர் ஆகியோர் மீது ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு, பவானி, பெருந்துறை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள், தனியார் வணிக வளாகங்கள், நிறுவனங்கள், பேக்கரிகள், உணவகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கரோனா விதிகளை பின்பற்றாத தனியார் உணவகம் ஒன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஏழுமலையான் வேடத்தில் கைலாச நாட்டு உரிமையாளர்: ட்ரெண்டிங் ஆகும் நித்தி!

ABOUT THE AUTHOR

...view details