சென்னை:தொழில் வர்த்தக சபை எனும் அமைப்பு சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற 'மாசு உமிழ்வற்ற பெருநகருக்கான திட்டமிடல்' எனும் ஒருநாள் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு பேசிய அமைச்சர், "தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்குவது சூழ்நிலையைப் பொருத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார். கடந்த மாதம் 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்' (Climate Change Mission) என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால பாதிப்பை தடுப்பதே அரசின் நோக்கம். இதற்கென 500 கோடி ஒதுக்கி இந்த ஆண்டு 73 கோடிக்கு அனுமதி தந்துள்ளார்.