சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மெரினா கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 50 ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் செயல்பட்டுவந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
அங்கு 60 விழுக்காடு கடைகளுக்கு (540) மட்டுமே குலுக்கல் முறையில் கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 விழுக்காடு கடைகள் புதிய வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மெரினா கடற்கரை அனைத்து வியாபாரிகள் நல சங்க செயற்குழு உறுப்பினர் திருவேங்கடம், ’மெரினா கடற்கரையில் சுமார் 1,940 கடைகள் இருந்தன. தற்போது 900 கடைகளுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
அதிலும் 540 கடைகள் மட்டுமே பழைய வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குலுக்கல் முறையை ரத்து செய்து, எங்களுக்கு தேவையான கடைகளை உடனடியாக ஒதுக்கவேண்டும்.