சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில்,
தமிழகத்தில் பழமையான சாமி சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டு சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 41 வழக்குகளின் புலன்விசாரணை விவர ஆவணங்களைக் காணவில்லை. இதனால், அந்த வழக்குகள் கைவிடப்பட்டுவிட்டன. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மிகமுக்கிய நபர்கள் தொடர்புள்ள சிலை கடத்தல் வழக்குகளை இப்படித்தான் போலீசார் முடித்து வைப்பதாகவும், உயர்அதிகாரிகளுடன், விசாரணை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து சிலை கடத்தல் வழக்குகளை மூடி மறைக்கின்றனர். இதன்மூலம் அந்த வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்.