சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்து வந்த பொன். மாணிக்கவேல் கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஆனால், புதிய ஐ.ஜி. யாரும் நியமிக்கப்படமால், நீதிமன்ற உத்தரவின் படி, பொன். மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக ஒரு ஆண்டுகளாக பொறுப்பு வகித்தார். நவம்பர் 30ஆம் தேதியோடு அவரது பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைக்குமாறு அரசு அவருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் மூலம் தான் நியமிக்கப்பட்டதால், அரசின் ஆணை தனக்குப் பொருந்தாது என்று பொன். மாணிக்கவேல் பதில் தெரிவித்திருந்தார்.