தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் திருடு போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் திருடு போன சிலை, அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Idol Anti Smuggling Unit police found the stolen statue from Mayiladuthurai temple in America museum
மயிலாடுதுறை கோயிலில் இருந்து திருடு போன சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர்

By

Published : May 2, 2023, 7:07 AM IST

சென்னை: தமிழகத்தில் கும்பகோணம் சரகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பழமையான கோயில்களுக்கு சொந்தமான சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில், தருமபுரம் ஆதீன மடத்தில் நிர்வாகத்தில் உள்ள அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தணிக்கை செய்தனர். அப்போது கோயிலில் இருந்த வீணாதார தட்சிணாமூர்த்தி சிலைக்கு பதிலாக போலி சிலை வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து பாண்டிச்சேரியில் உள்ள மியூசியத்தில் இருந்த காணாமல் போன சிலையின் பழைய புகைப்படத்தை எடுத்து பல்வேறு அருங்காட்சியங்களின் வலைப்பக்கத்தில் உள்ள சிலைகளின் படங்களுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்பிட்டு பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறையில் திருடு போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

விசாரணையில் அமெரிக்காவில் உள்ள கிலேவ்லேண்ட்(Cleveland) என்ற அருங்காட்சியகத்தின் வலைத்தளத்தில் காணாமல் போன வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவரும் பணிகளில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலையானது கோயிலில் இருந்து எப்படி திருடப்பட்டது எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details