தமிழ்நாடு

tamil nadu

தனியாருக்கு விற்கப்படும் ஐடிபிஐ வங்கி- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு

By

Published : May 5, 2021, 9:34 PM IST

ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்பனை செய்ய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனியாருக்கு விற்கப்படும் ஐடிபிஐ வங்கி
தனியாருக்கு விற்கப்படும் ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ (IDBI) வங்கியை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சிஎச் வெங்கடாலசம், மத்திய அரசு ஐடிபிஐ வங்கியில் குறைந்தபட்சம் 51 விழுக்காடு பங்குகளைக் கையில் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் அந்த வங்கியின் வாராக்கடனை வசூல் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அறிக்கையில், "வங்கியை தனியார் நிறுவனத்துக்கு விற்றால், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு திரும்பப்பெறப்படும். இது வேலை இல்லாத இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

வங்கியின் மிகப்பெரிய சிக்கலாக கருத்தப்படுவது கடந்த மார்ச் மாதம் வரையிலான 36,000 கோடி ரூபாய் கடன்தான். இதுவரை கிடைத்த 1, 900 கோடி ரூபாய் பணத்தில், மோசமான நிலையில் இருக்கும் கடன்களை செலுத்த 1, 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தற்போது வங்கியின் இந்த சூழ்நிலையை மறைக்க வங்கி விற்க்கப்படுகிறது. இந்த முடிவுக்கு எதிராக எங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மேலும் ஐடிபிஐ வங்கியை விற்கக்கூடாது எனவும் அரசை வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு ரத்து: திமுக அரசு மேல்முறையீடு செய்ய வைகோ வலியுறுத்தல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details