கரோனா தடுப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாகப் பேச தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தைச் சார்ந்த சென்னை தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநரும், கோவிட்-19 தேசிய பணிக் குழுவைச் சார்ந்த முன்னணி உறுப்பினருமான டாக்டர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் ஆகியோர் சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்த ஐ.சி.எம்.ஆர். மருத்துவர்கள் ! - ICMR doctors meets tn cm
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த ஐ.சி.எம்.ஆர். மருத்துவர்கள், தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
![தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்த ஐ.சி.எம்.ஆர். மருத்துவர்கள் ! ICMR doctors meets tn cm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7261372-1004-7261372-1589885751630.jpg)
ICMR doctors meets tn cm
இச்சந்திப்பில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளுக்காக முதலமைச்சருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
Last Updated : May 19, 2020, 6:39 PM IST