சென்னை: "வந்தே பாரத்" ரயிலில் கட்டணம் உயர்வாக இருக்கிறது, எளிய மக்கள் பயன்படுத்த முடியவில்லை என்ற விமர்சங்கள் எழுந்த நிலையில் எளிய மக்களுக்காக "வந்தே பாரத்" ரயிலில் இருக்கும் நவீன வசதிகளுடன் சாதாரண "புஷ் & புல்" தயாரிப்பு பணி விரைவில் சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தொடங்க உள்ளது.
உலக புகழ்பெற்ற ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ICF) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் "ரயில்-18" என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு, "வந்தே பாரத் விரைவு ரயில்" என்று பெயரிட்டு, கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் "வந்தே பாரத்" ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.
இதுவரை 31 "வந்தே பாரத்" ரயில் தயாரிக்கபட்டுள்ளது. நாட்டின் முதல் "வந்தே பாரத்" ரயில் சேவை டெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை 25 "வந்தே பாரத்" ரயில்கள் 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கி வருகின்றன.
"வந்தே பாரத்" ரயில் சேவை பலதர மக்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்று வருந்தாலும், சில மக்கள் இதை கட்டணம் உயர்வாக இருக்கிறது, எளிய மக்கள் பயன்படுத்த முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் 75 "வந்தே பாரத்" ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்திய ரயில்வே துறை இலக்கு வைத்துள்ளது. இதுவரை வேறு எந்த எந்த வழித்தடங்களில் "வந்தே பாரத்" ரயில் இயக்கப்பட முடியும் என்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து சென்னை-மைசூரு, சென்னை-கோவை இடைய என இரண்டு ரயில்கள் இயக்கப்படு வருகின்றன. மேலும் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடைய "வந்தே பாரத்" ரயில் இயக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
"வந்தே பாரத்" ரயிலின் வசதிகள்: "வந்தே பாரத்" மணிக்கு 130 கி.மீ முதல் 160.கி.மீ வேகத்தில் இயக்கப்படக் கூடியவை. எடை குறைவானவையாகவும் குஷன் வசதி கொண்ட இருக்கைகளுடனும் இருக்கும். 16 முதல் 8 பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் இடையிடையே இணைப்புகள் இருக்கும். இதனால், ரயிலின் உள்ளே சத்தமோ மழை பெய்யும் பட்சத்தில் மழைத்துளிகளோ, வெயிலோ வராமல் இருக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பான கழிப்பறைகள் இருபுறமும் இடம் பெற்று இருக்கின்றன. சிசிடிவி கேமராக்கள், செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி தீ உணர்வு மற்றும் எச்சரிக்கை அலாரம் ஆகியவை இடம்பெறும். ஒரே வழித்தடத்தில் எதிரெதிரே ரயில் வந்து மோதிக் கொள்ளாமல் இருக்க தானாகவே எச்சரிக்கை செய்து ரயிலை நிறுத்தும் கவச் நவீன கருவி இடம் பெற்று இருக்கின்றன. மேலும் இரு முழு சொகுசு ரயிலாக இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, தற்போது எளிய மக்களும் இந்த "வந்தே பாரத்" ரயிலில் இருக்கும் வசதிகளை பெற இந்த வசதிகளை சாதாரண ரயிலில் கொண்டு புதிய ரயிலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு "அந்த்யோதயா வந்தே பாரத்" என்ற பெயரில் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ICF) பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) அதிகாரிகள் கூறியதாவது, சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் "ரயில்-18" என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு "வந்தே பாரத் விரைவு ரயில்" என்று பெயரிடப்பட்டது. அதே போல், தற்போது தயாராகும் ரயிலுக்கு அதிகாரப்பூர்வமான பெயர் தற்போது வரை வைக்கப்படவில்லை. ஆனால் தற்காலிகமாக இந்த ரயிலுக்கு "புஷ் & புல்” (Push & Pull) ரயில் என தொழில்நுட்ப பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏன் "புஷ் & புல் ரயில்" என்ற பெயர் காரணம் என்வென்றால் பொதுவாக ரயிலில் இருபக்கமும் ரயிலின் இன்ஜின்கள் இருக்கும், வந்தே பாரத் ரயிலில் உள்ளது போல் இணைந்த இன்ஜின் இல்லாமல் இதற்கு என்று தனி இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சாதாரண ரயிலின் இன்ஜின் எந்த திசையில் செல்கிறதோ அந்த திசையில் தான் இழுவை திறன் செயல்பட்டு ரயிலானது செல்லும் மறு முனையில் இருக்கும் இன்ஜின் இயங்க முடியாது. ஆனால் இந்த "புஷ் & புல்" ரயிலில் இரண்டு பக்கமும் ரயில் இன்ஜின்கள் இருக்கும். இந்த இன்ஜின்கள் இரண்டு பக்கம் ஒரே நேரத்தில் செயல்படும் விதாம அமைக்கப்பட உள்ளது. இது ஒரே நேரத்தில், ஒரு ரயிலை முன்னால் இருக்கும் இன்ஜின் இழுத்துக் கொண்டும் பின்னால் இருக்கும் இன்ஜின் ரயிலை தள்ளிக் கொண்டும் இயங்கும். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு விசையும் உருவாகும் என்பதால் இன்ஜின்கள் 130.கீ.மீ வேகத்தில் செல்லக்கூடும். இதற்கு என்று மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில் சிறப்பு இன்ஜின்கள் தயாரிக்கப்படவுள்ளது.
இந்த புஷ்&புல் ரயிலில் மொத்தம் 22பெட்டிகள், 2 இன்ஜின்கள் கொண்டவை ஆகும். மேலும் 22 பெட்டிகளில், 12 பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும் (Sleeper Class Coach) முன்பதிவு இல்லாத 8 பெட்டிகள் (Un-Reserved Coach), மேலும் சரக்குகள் கொண்டு செல்லவும் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக என 2 பெட்டிகள் உள்பட மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெறும். இந்த ரயிலில் முழுவதும் குளிர்ச்சாதன வசதி இல்லை(Non-AC). இந்த ரயிலில் வந்தே பாரத் ரயிலில் இருக்கும் முக்கிய வசதிகள் இந்த ரயிலிலும் இடம் பெற்ற இருக்கின்றன.
குறிப்பாக செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி தீ உணர்வு மற்றும் எச்சரிக்கை அலாரம் ஆகியவை இடம்பெறும் மேலும் உட்புற வசதியிலும், தொழிநுட்பம் வகையிலும் ரயிலின் வடிமைப்பு வழக்கமான முறையில் இல்லாமல் "வந்தே பாரத்" ரயிலில் இருப்பது போல் ஸேஸ்பன்ஷன் மற்றும் ஏர்-லாக் கப்பில்(AAR-coupler) முறையில் இருக்கும். இதில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு ஒரு சுமூகமான பயணத்தை அளிக்கும் வகையில் இது தயாரிக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில், தொடங்கப்படும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் ரயில்கள் தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!