தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலக்கிய சந்தேகங்களை தீர்க்கும் இடம் கீழடி -உதயசந்திரன் ஐஏஎஸ்! - கீழடி பெருமை

சென்னை: தமிழ் இலக்கியங்கள் படிக்கும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள கீழடி செல்லுங்கள் அத்தனைக்கும் பதில் கிடைக்கிறது என உதயசந்திரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

இலக்கிய சந்தேகங்களை தீர்க்கும் இடம் கீழடி -உதயசந்திரன் ஐஏஎஸ்!
இலக்கிய சந்தேகங்களை தீர்க்கும் இடம் கீழடி -உதயசந்திரன் ஐஏஎஸ்!

By

Published : Jan 11, 2020, 4:19 PM IST

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறும் வீதி விருது விழா நிகழ்வில் தொல்லியல் துறையின் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய உதயசந்திரன், “கீழடியை நுட்பமாக கண்டறிந்தவர் ஓர் ஆசிரியர் தான். தமிழகமெங்கும் தமிழ் மரபு குறித்த தேடல் இப்போதும் உள்ளது. அதில் ஒரு அங்கம் தான் கீழடி. அதன் அகழாய்வை சுற்றியுள்ள பகுதிகளிலும், இன்னும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 2600 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு பெற்றவர்கள் நாம் என்பதை ஏற்கனவே நிரூப்பித்துள்ளோம்.

கீழடியில் கிடைத்த எலும்பு துண்டுகளை பூனோ ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட போது எனக்கு பெருமையக இருந்தது. அந்த எலும்புகளில் திமில் கொண்ட காளையும் இருந்தது. அந்த காளைகள் இன்னும் சில நாட்களில் மதுரையில் எழுந்து விளையாட உள்ளது. தமிழ் இலங்கியங்கள் படிக்கும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் நீங்கள் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள கீழடி செல்லுங்கள் அத்தனைக்கும் அங்கு பதில் கிடைக்கிறது. இன்றைய நவ நாகரீக இளைஞர்கள் பொறாமைப்படும்படி பொருட்களை அப்போதே செய்துள்ளனர் நம் முன்னோர்கள். அங்கு விளையாட்டு பொருட்கள் அதிகம் கிடைத்துள்ளது. எந்த சமூகம் தங்களது குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்துகிறதோ அவர்களே அடுத்த தலைமுதையை சிறப்பாக எடுத்துச் செல்பவர்கள் என்பதை தமிழர்கள் அப்போதே நிரூபித்துள்ளனர்” என்றார்.

இலக்கிய சந்தேகங்களை தீர்க்கும் இடம் கீழடி -உதயசந்திரன் ஐஏஎஸ்!

இதையும் படிங்க...துணை வேந்தருக்கு சாதகமாகக் காவல்துறை நடந்துகொள்கிறது - மாணவர் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details