சென்னை: ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - IAS officers transferred by tamilnadu govt
நில சீர்திருத்த துறை இயக்குனராக இருந்த லில்லி, தொழிற்துறை சிறப்பு அலுவலராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆதி திராவிடர் துறை இயக்குனராக இருந்த முனி ஆனந்தன், தொழிலாளர் நலத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நில சீர்திருத்த துறை இயக்குனராக இருந்த லில்லி, தொழிற்துறை சிறப்பு அலுவலராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை சிறப்பு செயலாளராக இருந்த பூஜா குல்கார்னி, தொழிற்துறை வழிகாட்டு அலுவலராகவும், ஏற்றுமதி அறிவுரையாளராகவும் நியமித்து உத்தரவு, நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் கூடுதல் பிரிவாக இதை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நகர வடிவமைப்பு, பஞ்சாயத்து துறை செயலாளராக இருந்த கணேசன் ஐஏஎஸ் தமிழ்நாடு சாலை திட்ட இயக்குனராக நியமனம்.
உயர்கல்வி துணை செயலாளராக இருந்த சங்கீதா, உணவு வழங்கல் துறை இணை இயக்குனராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'மதுரை எய்ம்ஸ் அடுத்தகட்ட நகர்வு' - ஒன்றிய அமைச்சரிடமிருந்து பதில்