திருநெல்வேலி மற்றும் lகாஞ்சிபுரம் மாவட்டங்களை இரண்டாக பிரித்து தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தனி ஐஏஎஸ் அலுவலர்களை அரசு நியமித்தது. அதன்படி சர்க்கரை துறை கூடுதல் இயக்குனராக இருந்த அருண் சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட்ட தனி அலுவலராகவும், தமிழ்நாடு கடல்சார் வாரியம் உதவி சேர்மேன் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஜான் லூயிஸ் தென்காசி மாவட்ட தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டனர்.
புதிய மாவட்டங்களின் தனி அலுவலர்கள் இடமாற்றம்!
சென்னை: தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட தனி ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு
தற்போது ஜான் லூயிஸ் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், அருண் சுந்தர் தயாளன் தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் வருவாய் நிர்வாக அளவில் மாவட்டங்களைப் பிரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.