தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாற்றப்படும் ஐ.ஏ.ஏஸ் அலுவலர்கள்! - IAS officers repeatedly transferred in Tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

IAS officers
ஐஏஏஸ் அலுவலர்கள்

By

Published : May 28, 2021, 10:24 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • உயர் கல்வித்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சர்க்கரை உற்பத்தி துறை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளராக ஹர்மந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
    தொடர்ச்சியாக மாற்றப்படும் ஐஏஏஸ் அலுவலர்கள்

இதில், மத்திய சுற்றுச்சூழல்துறை தலைவராகப் பதவி வகித்த ஷிவ்தாஸ் மீனாவை, மாநில அரசுப் பணியிடத்துக்கு மாற்றம் செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details