தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஏஎஸ் அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்! - அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்னா

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்

By

Published : Oct 9, 2019, 9:57 PM IST

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, போக்குவரத்துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையில் முதன்மைச் செயலாளராகவும்; எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்.

தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை
ஐஏஎஸ் அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் குறித்த அரசாணை

தமிழ்நாடு நகர்ப்புறநிதி மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த அசோக் டாங்ரே சுற்றுலா பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளராகவும்; சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த அபூர்வ வர்மா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநராகவும் பணி நியமனம் செய்யப்படுகிறார்.

போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளராக சந்திரமோகன் ஐஏஎஸ்

தகவல் தொழில்நுட்பத் துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் சந்தோஷ் பாபுவுக்கு தமிழ்நாடு காதி கிராப்ட் மேம்பாட்டு கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுகிறது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் தீரஜ்குமார் கூடுதலாக எரிசக்தித் துறையையும் கவனிப்பார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக வினய் ஐஏஎஸ்

தமிழ்நாடு சிறு, தேயிலை நிறுவனங்கள் கூட்டுறவு இணையத்தில் மேலாண்மை இயக்குனநராக சுப்ரியா சாகு என்பவரும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி, பகிர்மான கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநராக வினித் என்பவரும் நியமிக்கப்படுகிறார்.

மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்னா என்பவரும் மதுரை மாவட்ட ஆட்சியராக வினய் என்பவரும் நியமனம் செய்யப்படுகிறார்.

இதையும் படியுங்க:

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமைச் செயலர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details