சென்னை:வங்கக் கடலில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயலால், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடந்ததாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.