தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

HELICOPTER CRASH : விபத்து நடந்தது முதல் டெல்லிக்கு வீரர்களின் உடல் அனுப்பப்பட்டது வரை: முழு விவரம் - ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்களை

iaf helicopter crash, IAF Mi 17V5 helicopter explained, Mi 17 V5, bipin rawat helicopter, bipin rawat news, army helicopter crash tamil nadu, mi 17 v5 helicopter, mi 17 v5 helicopter crash, mi 17 v5 helicopter crash today, mi 17 v5 helicopter indian air force, mi 17 v5 helicopter safety, mi 17 v5 helicopter iaf, helicopter crash, helicopter crash news, helicopter crash iaf, army chopper crash, army chief bipin rawat, cds bipin rawat, ஹெலிகாப்டர் விபத்து, பிபின் ராவத், எம்ஐ 17வி 5, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து, முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ஹெலிகாப்டர் அம்சங்கள், இந்திய வான் படை ஹெலிகாப்டர் விபத்து, Mi17 V5 ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்கள், ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்களை, IAF MI 17V 5
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

By

Published : Dec 9, 2021, 10:19 AM IST

Updated : Dec 9, 2021, 10:49 PM IST

16:52 December 09

பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டார் கேப்டன் வருண் சிங்

பெங்களூரு கொண்டுசெல்லப்பட்ட கேப்டன் வருண் சிங்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில், கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

15:51 December 09

கடைகளை அடைக்க முடிவு

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் ராணுவ தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தற்க்கு இரங்கள் தெரிவிக்கும்விதமாக நாளை (டிசம்பர் 10) உதகைமண்டலம், குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்க வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

15:39 December 09

வீரர்களின் உடல்களை சுமந்து டெல்லி புறப்பட்டது விமானம்

டெல்லி புறப்பட்டது விமானம்

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூர் சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

15:26 December 09

சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டுவரப்பட்ட உடல்கள்!

சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டுவரப்பட்ட உடல்கள்

விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல் சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து அவர்களது உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

13:35 December 09

பாதுகாப்பு சென்ற வாகனம் விபத்து

பாதுகாப்பு சென்ற வாகனம் விபத்து

நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில், 13 ராணுவ உடல்களை ஏற்றிச்சென்ற அவசர ஊர்தி வாகனங்களுக்கு பாதுகாப்பிற்காக சென்ற தமிழ்நாடு காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த காவல்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

13:23 December 09

விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

12:59 December 09

சூலூர் கொண்டுசெல்லப்படும் உடல்கள் - வழிநெடுகிலும் பொதுமக்கள் அஞ்சலி

சூலூர் கொண்டுசெல்லப்படும் உடல்கள்

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 13 வீரர்களின் உடல்கள் சாலை மார்க்கமாக கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.

சாலை வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று, ராணுவ வீரர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

12:40 December 09

மேல் சிகிச்சைக்காக பெங்களுர் செல்லும் வருண் சிங்

ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் கேப்டன் வருண் சிங், மேல் சிகிச்சைக்காக நாளை (டிசம்பர் 10) பெங்களூர் கொண்டு செல்லப்படுகிறார்.

12:35 December 09

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் பெயர்கள்

இந்திய விமான படை ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள்:

  1. முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்
  2. பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத்
  3. ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிக் லக்பிந்தர் சிங் லிடர்
  4. அலுவலர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்

விமானப்படை ஹெலிகாப்டர் குழுவினர் உள்பட ஒன்பது பாதுகாப்புப் படை வீரர்கள்:

  1. விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான்
  2. படைத் தலைவர் குல்தீப் சிங்
  3. ஜூனியர் வாரண்ட் அலுவலர் ராணா பிரதாப் தாஸ்
  4. ஜூனியர் வாரண்ட் அலுவலர் அரக்கல் பிரதீப்
  5. ஹவில்தார் சத்பால் ராய்
  6. நாயக் குர்சேவக் சிங்
  7. நாயக் ஜிதேந்திர குமார்
  8. லான்ஸ் நாயக் விவேக் குமார்
  9. லான்ஸ் நாயக் பி சாய் தேஜா

12:01 December 09

தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் அஞ்சலி

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தும் காட்சிகள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடலுக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

11:23 December 09

முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உடல் உள்பட 13 பேரின் உடலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

11:06 December 09

கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்ட இடம்

நீலகிரியில் காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடத்த இடமானது மதியம் 3 மணியளவில் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு அங்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டியை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக்குழு, வெலிங்டன் ராணுவ மையக்குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்தது.

10:46 December 09

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி இன்று நேரில் ஆய்வு

விபத்து நடந்த இடத்தில் விமானப் படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் இருந்து CRASH DATA RECORDER என்றழைக்கப்படும் குரல் பதிவு கருவியை கண்டறிந்து, அதில் பதிவான பேச்சுகளை ஆராய்ந்தால் மட்டுமே முழு தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது.

10:02 December 09

ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி நேற்று (டிச.8) இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ-17வி5 (IAF Mi-17V5) ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது.

இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர். இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி தரையிறங்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது. குன்னூரில் நிலவிய மோசமான வானிலை (கடும் மூடுபனி) காரணமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வானிலை அறிக்கையின்படி, சூலூர் இந்திய விமான படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் சென்ற வான்வழி பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது. அதனுடன் அதிக ஈரப்பதம் மற்றும் லேசான மழை நிலவியது. மேலும், விபத்து நடந்தபோது சுமார் 15 டிகிரி வெப்பநிலை இருந்ததாகவும், குன்னூர் அருகே நஞ்சப்பன் சத்திரம் பள்ளத்தாக்கு முழுவதும் அடர்ந்த மூடுபனி சூழ்ந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது, விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 9, 2021, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details