தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமனோடு இருக்க வேண்டிய 'பரதன்' ராவணனோடு இருக்கிறார் - 'ஓபிஎஸ்'க்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் டிடிவி - ஓபிஎஸ்க்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் டிடிவி

சென்னை: சசிகலா நிலைப்பாட்டை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்தால் நிச்சயமாக வரவேற்பேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

By

Published : Feb 20, 2021, 6:42 AM IST

சென்னை தியாகராயநகரில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "சசிகலா தலைமையில் அதிமுக திரளும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து தெரிவித்துவருகிறார், அது அவரது கருத்தாகும். வேதியியல் மாற்றம் இருப்பதால்தான் அச்சத்தில் நிறைய பேர் பேசிவருகின்றனர்.

அமமுக, திமுகவின் பி டீம் எனக் கூறுவது சிரிப்புதான் வருகிறது. பெரியகுளத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும்தான் திமுகவிற்கு ஆதரவளித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் என்பதைத் தாண்டி உள்ளூர் பிரச்சினைகள் சார்ந்து அவர்கள் முடிவெடுக்கிறார்கள். இதில் எங்கிருந்து வருகிறது பி டீம். தேமுதிக, அதிமுக கூட்டணியில் உள்ளதால் அவர்கள் அளித்த ஆதரவை நாசுக்காக மறைத்துப் பேசுகின்றனர்.

ஆளும் அதிமுக கருணாநிதி சிலை வைக்க அனுமதியளித்ததுதான் வித்தியாசமானது; விசித்திரமானது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பரதனாக இருந்தது உண்மைதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுய விருப்பத்தின்பேரில்தான் பரதன் ரோல் செய்தார். சசிகலா பதவி ஏற்க முடியாத நிலையில் அவர் பரதன் ஆகவே இருந்திருந்தால் மீண்டும் பரதனாக இருந்திருப்பார். பரதன் ராமனோடு இருக்க வேண்டியவர் ராவணனோடு இருக்கிறார்.

அவர் மனவேதனையில் உள்ளதாக என் உள்ளுணர்வு கூறுகிறது. தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம், அதன்பின் அதிமுகவை மீட்போம். கூட்டணி குறித்து பாஜக எதுவும் எங்களிடம் பேசவில்லை.

சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் எடுத்தால் நிச்சயம் வரவேற்போம், பரதனாகிவிட்டார் என நினைத்துக்கொள்வேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:'இப்போது நடப்பது அரசே அல்ல; ஊழல்வாதிகளின் கோட்டை' - திமுக தலைவர் ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

hjaha

ABOUT THE AUTHOR

...view details