தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம் - latest trichy news

234 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும், தான் சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

I will not meet Sasikala says Minister Vellamandi Nadarajan
சசிகலாவை சந்திக்க மாட்டேன்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம்

By

Published : Feb 16, 2021, 8:48 PM IST

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு, வருவாய் துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 3,100 பெண்களுக்கு 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், திருமண நிதி உதவியையும், 1,984 பயனாளிகளுக்கு ரூ.10.93 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப் பட்டாவையும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும். அமமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அதிமுக தலைமை அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் இல்லை, சசிகலாவை நிச்சயம் நான் சந்திக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க:’பழனிசாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடக்காது’: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details