சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தனக்கு தேர்தலில் ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த காலங்களில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் ஒரு ரப்பர் ஸ்டாம்பு போலவும், பிரதமர் அலுவலகத்தின் சிறைவாசி போலவும் செயல்பட்டார்கள்.
நான் அவ்வாறு செயல்பட மாட்டேன். குடியரசுத் தலைவர் சார்பு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெற்றிக்காக பாடுபடுவேன். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ராஷ்டிரபதி பவன் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவேன். மகாராஷ்டிராவில் ஆளும் அரசை தவித்ததன் மூலம் கடத்தல் அரசியலை பாஜக அரசு செய்துவருகிறது.