சென்னை: பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன் திமுகவினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிட்டார். மேலும் சொத்து விவரம் குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் அவதூறு பரப்பும் வகையில் அண்ணாமலை வீடியோ வெளியிட்டதற்காக 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்குப் பகுதி திமுக சார்பில் நடைபெற்ற திமுக செயல்குழு கூட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலத் தலைவர் வே.கருணாநிதி உட்படப் பலர் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், ''பாஜகவின் தமிழ்நாடு தலைவர் என்னைப் பற்றி கூறிய அவதூறு குறித்த செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. அவதூறுகள் குறித்து நான் நோட்டீஸ் அளித்தேன். தற்போது வரை அவரிடம் இருந்து எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. எனது வழக்கறிஞருக்கும் வரவில்லை.
இதையும் படிங்க: Chennai Rains: சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. அண்ணா சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி!