தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவில் எந்த பணி கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வேன்' - எ.வ வேலு - tr baalu

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் எந்த பணி கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வேன் என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

velu
velu

By

Published : Sep 3, 2020, 9:49 PM IST

திமுக பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவிற்கும், திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான எ.வ வேலுவிற்கும் இடையே போட்டி நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், இன்று (செப்.03) சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எ.வ வேலு, " நான் வேறு கட்சிக்கு செல்ல உள்ளேன் போன்ற கருத்துகள் தவறானது. திமுக கட்சியை பொறுத்தவரை கலைஞர் காலத்திலும் சரி, தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் காலத்திலும் சரி எந்த நேரத்தில் யார் எந்த பதவிக்கு வர வேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும்.

திமுக பொதுச்செயலாளர், பொருளாளராக பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நானும் அவர்களை ஆதரித்து மனு தாக்கல் செய்துள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலின் எந்த பணி கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வேன். என்னுடைய பணி தலைவர் ஸ்டாலின் வழியில் தொடரும்” என்றார்.

இதையும் படிங்க:போட்டியின்றி திமுக பொதுச்செயலாளராகும் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details