தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம், நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையில் ரூ. 503 கோடி முறைகேடு - சென்னை செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கூட்டுறவுத்துறையில் ரூ. 503 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என அத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலம், நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையில் ரூ. 503 கோடி முறைகேடு
சேலம், நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையில் ரூ. 503 கோடி முறைகேடு

By

Published : Aug 25, 2021, 8:47 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், உறுப்பினர்கள் பலர் பங்கேற்று பேசினர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, "கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடியில் ஒரே நபர் பல வங்கியில் கடன் பெற்றுள்ளார். இந்த வகையில் 13,91,656 பேர் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்கள். இதில், ரூ. 5,796 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது.

3 நாட்களில் 16 லட்சம் பேர் கூட்டுறவு கடன் பெறுவதற்கு தகுதியானவர்கள் என எப்படி அதிமுக முன்னாள் அமைச்சர் ரகசிய பட்டியலை தயார் செய்தார்?

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பயிர் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி 8ஆம் தேதியே 16லட்சம் பேர் தகுதியுடையவர்கள் என அதிமுக அரசு அறிவித்தது. மூன்றே நாட்களில் அந்தப் பட்டியில் எப்படி தயார் செய்யப்பட்டது என்ற ரகசியத்தை முன்னாள் அமைச்சர்தான் தெரிவிக்கவேண்டும்" என கேள்வி எழுப்பினர்.

மேலும், சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்தும், பயிரிடப்பட்ட பயிர் வகைகளை தவறாக குறிப்பிட்டும் பல மடங்கு அதிகமாக கடன் தொகை பெறப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் 516 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றார்.

இதையும் படிங்க:விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ABOUT THE AUTHOR

...view details