சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,
தூத்துக்குடியில் இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது எனது விருப்பமல்ல, மக்களுக்கு சேவை செய்வது தான் எனது விருப்பாமாகும். அதனால் தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். தூத்துக்குடி மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த தொகுதி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு உள்ளேன். ஸ்டெர்லைட் விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கு நேரிடையாக தொடர்பு கிடையாது, வேண்டுமென்றே எதிர் கட்சிகள் எங்கள் மீது விமர்சனங்களை வைக்கின்றனர்.